பெண் ஒருவரை கடத்திச் சென்று கூட்ட வன்புணர்வு..! பெண் எதிர்ப்பு தெரிவித்ததால் கதை அறுத்து வீசிய காமுகர்கள்..!இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று இளம்பெண்ணை கடத்தி சென்று கூட்ட வன்புணர்வுக்கு இரையாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தின் பாக்பட் மாவட்டத்தில் குறித்த கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது. சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டில் அத்துமீறி நுழைந்த 4 பேர் கொண்ட கும்பல் குறித்த பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றுள்ளது.
பின்னர் அப்பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தினுள் இளம்பெண்ணை கடத்தி சென்ற அந்த கும்பல் அங்கு கூட்ட வன்புணர்வுக்கு இரையாக்கியுள்ளது.
இதில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த அந்த பெண்ணை கொடூரமாக தாக்கியதுடன் அவரது காதையும் கத்தியால் வெட்டி வீசியுள்ளனர் அந்த கொடூர காமுகர்கள்.
இதனிடையே தமது மகளின் அழுகுரல் சத்தம் கேட்டு பதட்டமடைந்து ஓடிச்சென்று தடுக்க முயன்ற தாயாரையும் அந்த கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது.
மட்டுமின்றி சம்பவம் நடந்த பின்னர் அதே நாள் அந்த கும்பல் திரும்ப வந்து இளம்பெண்ணையும் தாயாரையும் மிரட்டி விட்டு சென்றுள்ளது. இதனால் பயந்த அவர் கடந்த 4 ஆம் திகதி நடந்த சம்பவத்தை எவரிடமும் தெரிவிக்கவோ பொலிசில் புகார் அளிக்கவோ துணிவின்றி பயத்துடன் இருந்துள்ளார்.
இந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் சிலர் துணையுடன் நேற்று பொலிசில் புகார் தெரிவித்ததை அடுத்து தாயாரையும் அந்த இளம்பெண்ணையும் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள பொலிசார், இதுவரை குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்பது மட்டுமல்ல, விசாரணை நடைபெற்று வருவதாக மழுப்பல் பதிலை அளித்துள்ளனர்.


Share on Google Plus
loading...

About Tamil News

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment