அமைச்சரின் சட்டையை கிழித்த சசிகலா..! பயந்து ஓடிய அதிமுகவினா்..! -நடந்தது என்ன..?


கட்சி நிர்வாகிகள் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி சசிகலா படத்தை பெரிதாக போட்டு தனது மாவட்ட அணியினருக்கு கொடுத்திருந்தார்
பேட்ஜுகளை பார்த்து கோபப்பட்டு எடப்பாடியை கடிந்துகொண்ட சசிகலா பேட்ஜை அவர் முன்னாலேயே கிழித்து எரிந்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக தலைமைக்கு யார் வரவேண்டும் என்பதில் பலவித கருத்துகள் உருவாகின.
கட்சி நிர்வாகிகள் அமைச்சர்கள் சசிகலாவை முன்னிருத்தினர். அவருக்கு தமிழகம் முழுதும் கட்சியின் கீழ் மட்ட தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா பொதுச்செயலாளர் ஆனார், பதவி ஏற்பின் போது உருக்கமாக பேசினார்.
அப்போது இதற்கு பின்னர் கட்சியில் எம்ஜிஆர் , ஜெயலலிதாவை தவிர யாரும் முன்னிலைப்படுத்தப்பட மாட்டார்கள் என தெரிவித்திருந்தார்.
ஆனால் கட்சி நிர்வாகிகள் , அமைச்சர்கள் தினம் தினம் சின்னம்மா , சின்னம்மா என புகழ் பாடுவதால் மேலும் மக்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் விமர்சனம் அதிகம் எழுகிறது ,
ஜெயலலிதாவை புறக்கணித்து வளர்மதி , பொன்னையன் , சைதை துரைசாமி , சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் பேசியது கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இதுவெல்லாம் உளவுத்துறை ரிப்போர்ட் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சசிகலா ஜெயலலிதாவுக்கு உரிய இடத்தில் தன்னை வைப்பது கூடாது என்று கட்டளை இட்டுள்ளார். முதல்வராக தான் வரவேண்டும் என்ற கோரிக்கையையும் அமைச்சர்கள் வைக்க கூடாது என்று கூறியுள்ளாராம்.
ஆனாலும் கட்சி நிர்வாகிகள் தங்கள் செயல்பாட்டை மாற்றி கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று கட்சி நிர்வாகிகளை சசிகலா சந்தித்தார்.
இதில் அமைச்சர் எடப்படியின் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களும் அடக்கம். அமைச்சர் எடப்பாடி தன்னுடைய விசுவாசத்தை காட்டுவதற்காக தனது மாவட்ட கட்சி நிர்வாகிகளுக்கு மட்டும் ஒரு பேட்ஜை அளித்திருந்தார்.
அதில் சசிகலா படத்தை பெரிதாக போட்டு , ஜெயலலிதா படத்தை சிறியதாக போட்டு சின்னம்மா வாழ்க என்று போட்டிருந்தது.
இதை வரும்போதே எடப்பாடி சட்டையில் குத்தியிருப்பதை பார்த்து ஆத்திரமடைந்த சசிகலா உடனடியாக அந்த பேட்ஜை பறித்து அவர் முன்னாலேயே கிழித்து வீசி எரிந்தார்.
அம்மா படத்தை சின்னதாக போட்டு என் படத்தை பெரிதாக போடுவதா என்று சீறிய சசிகலா அவ்வளவு பேரிடமும் பேட்ஜை கழற்ற சொல்லுங்கள் என்று கடுமையாக சொன்னார்.
இதனால் அரண்டு போன எடப்பாடி அப்படியேம்மா இதோ கழற்ற சொல்கிறேன் என்று அனைவரிடமும் கழற்ற சொல்லி வாங்கினார்.
சின்னம்மா படத்தை போட்டு பேர் வாங்கலாம் என்று நினைத்த எடப்பாடிக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து மற்ற அமைச்சர்களும்  தொண்டா்களும் அரண்டு போனார்களாம்.


Share on Google Plus
loading...

About Tamil News

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment