என்ன பிள்ளை பெக்குற நீ! விபரீத முடிவு எடுத்த மாமியார்..! - ஆண் குழந்தை பெறாததால் மருமகளுக்கு நடந்த கொடூரம்..! - Grime Now

என்ன பிள்ளை பெக்குற நீ! விபரீத முடிவு எடுத்த மாமியார்..! - ஆண் குழந்தை பெறாததால் மருமகளுக்கு நடந்த கொடூரம்..!

Loading...

உத்திரபிரதேச மாநிலம், முசாபர் நகரை சேர்ந்தவர் பிங்கி. இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
குடும்பத்திற்கு ஒரு வாரிசாக ஆண் குழந்தை வேண்டும் என்று எதிர்பார்ப்பில் இருந்தார் பிங்கியின் மாமியார். ஆனால், என்ன செய்வது பிறந்தது இரண்டு பெண் குழந்தைகள்.
இதனால் பிங்கியின் மீது அவரது மாமியாருக்கு வெறுப்பு ஏற்பட்டது. மேலும் பிங்கியை கொடுமைப்படுத்த ஆரம்பித்தார்.
நாட்கள் செல்ல செல்ல பிங்கியின் மீதான கோபம் அவரது மாமியாருக்கு அதிகரித்து கொண்டே வந்திருக்கிறது.
இந்நிலையில் ஆண் குழந்தை பெற்று தராததால் ஏமாற்றத்தால் கோபத்தின் உச்சிக்கே சென்ற பிங்கி மாமியார், பிங்கியை விஷம் வைத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் பிங்கியின் உடலை போலீசாருக்கு தெரியாமல் எரிக்க அவரது மாமியார் மற்றும் கணவர் இருவரும் முயற்சி செய்துள்ளனர்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் பிங்கியின் மாமியாரை கைது செய்தனர். பிங்கியின் கணவர் தப்பியோடி விட்டார்.
பிங்கியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பிங்கியின் கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மரண அறிவித்தல்: செல்லப்பா இம்மானுவேல் - மேலதிக விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்....
Loading...
Share on Google Plus
Loading...
loading...

About Tamil News

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment