என்னை தொட வேண்டும் என்று நினைகாதவர்களில் வினுசகரவர்த்தியும் ஒருவர் : சில்க் ஸ்மிதா


உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நடிகர் வினுசக்கரவர்த்தி (74)  நேற்று காலமானார்..1002 படங்களில் நடித்த பிரபல நடிகரான இவர் சுமார் 3 ஆண்டுகளாக உடல் நலமின்றி இருந்த அவர் நேற்று  மாலை 7 மணியளவில் மரணம் அடைந்தார்.அவரது மனைவி பெயர் கர்ணப்பூ…அவருக்கு சரவணன் சண்முகப்பிரியா என்கிற மகன் மகள் உள்ளனர்..!
வினுசகரவர்த்தி நடிகர் என்பது மட்டுமே அனைவருக்கும் தெரிந்த விஷயம். தெரியாத விஷயங்களில் முக்கியமானது அவர் ஒரு நல்ல கதாசிரியர்.
வண்டிச்சக்கரம் படத்தின் கதை வசனம் இவர்தான். தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சிப் புயலாய் நுழைந்த சில்க் ஸ்மிதாவை அறிமுகம் செய்தவர் வினுசக்கரவர்த்தி.
ஒரு முறை சில்க் ஸ்மிதா மனம் திறந்து  ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் “என்னிடம் மிக  நேர்மையாக பழகியவர்களில் நான் குருவாக மதிக்கும் வினுசக்கரவர்த்தியும் ஒருவர். என்னை ஒருநாளும் அவர்  தவறாக அணுகியதே  இல்லை “. என்றார்.
இந்த விஷயம் வெளியானதும் வினுசக்கரவர்த்திக்கு போன் செய்து பாராட்டியவர்கள் அதிகம் பேர்.
அதற்கு சிரித்த வினுசக்கரவர்த்தி “இது என்ன பாராட்டுக்குரிய விஷயமா.. நாம் ஒரு பெண்ணிடம் அப்படிதானே பழக  வேண்டும்”. என்று சொல்லி அசர வைத்தார்.
ஒரு நல்ல நடிகர் என்பதை விட நல்ல மனிதர் மரணித்தார் என்பது தான் சோகம்.


Share on Google Plus
loading...

About Tamil News

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment